புதிய வழக்கால் மீண்டும் சிக்கல்; நீதிபதிகள் போட்ட உத்தரவு!

புகைப்படத்தை பயன்படுத்த தடை

Apr 17, 2026 - 11:53
 3
புதிய வழக்கால் மீண்டும் சிக்கல்; நீதிபதிகள் போட்ட உத்தரவு!

புதிய வழக்கால் மீண்டும் சிக்கல்; நீதிபதிகள் போட்ட உத்தரவு! 

பாமகவில் உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் புதிய வழக்கு. 

சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தில் தன்னுடைய புகைப்படத்தை பயன்படுத்த தடை விதிக்க கோரி சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மனு அளித்துள்ளார்.

அந்த மனுவில் தனக்கும் அன்புமணிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், பிரச்சாரத்தின் போது தனது புகைப்படத்தை பயன்படுத்தக் கூடாது என்றும் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.

இந்த மனுவை விசாரித்ததன் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் 18 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.  

பாமக நிறுவனர் ராமதாஸ் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை ஏப்.21ம் தேதிக்கு ஒத்திவைப்பு.