ஹரியானாவில் பாஜக வெற்றி உறுதி!

Sep 30, 2024 - 14:33
 16
ஹரியானாவில் பாஜக வெற்றி உறுதி!

ஹரியானாவில் மூன்றாவது முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என அம்மாநில முதல்வர் நயாப் சிங் சைனி தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டு ஆண்டுகளில் எங்களின் வளர்ச்சி வரவேற்கத்தக்கது, பாஜகவில் உள்கட்சி பூசல் இல்லை எனவும், இது ஒரு ஜனநாயக கட்சி யார் வேண்டுமானாலும் தங்கள் கோரிக்கையை எழுப்பலாம், பாஜகவில் எந்த சண்டையும் இல்லை, இனிமேலும் எந்த சண்டையும் இருக்காது.

எனவே பாஜகவிற்கு வாக்களிப்பதில் மக்கள் தெளிவாக உள்ளனர். நாங்கள் மாநிலத்தில் அபார வெற்றியை பெறுவோம் என நம்பிக்கையுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.

மேலும், மார்ச் மாதம் முதல்வராகப் பதவியேற்ற சைனி, லட்வா தொகுதியில் போட்டியிடுகிறார். பாஜகவில் பிளவு இல்லை ஆனால் காங்கிரஸில் பிளவு ஏற்படுவது நிச்சயம் எனவும், ஹரியானாவில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சி அமைக்காது எனவும் கூறியுள்ளார்.