நிறுத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

டெல்லியில் இன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Apr 27, 2024 - 02:13
Sep 9, 2024 - 23:05
 6
நிறுத்திவைக்கப்பட்ட மேயர் தேர்தல்!

டெல்லியில் இன்று நடைபெறுவதாக திட்டமிடப்பட்டிருந்த மேயர் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

டெல்லி மேயர் தேர்தலை இன்று நடத்த இந்திய தேர்தல் ஆணையம் கடந்த புதன் கிழமை ஒப்புதல் அளித்திருந்தது. அதன்படி தேர்தல் நடத்த அனைத்தும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் அதற்கான தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் தேர்தலை தள்ளி வைக்கப்படுவதாக டெல்லி மாநகராட்சி தெரிவித்துள்ளது.

இதனிடையே, துணை நிலை ஆளுநர் அலுவலகம் தலைமை அதிகாரியை நியமிக்காததால் தேர்தல் ரத்து செய்யப்படுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

தற்போது மேயர் செல்லி ஒப்பராயன் பதவிக்காலம் மார்ச் 31ம் தேதியுடன் முடிவடைந்ந்துவிட்டது. ஆனாலும், புதிய மேயர் தேர்ந்தெடுக்கும் வரை அவர் பதவியில் நீடிப்பார் எனவும் கூறப்படுகிறது.