கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!

Mar 30, 2024 - 01:48
 7
கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி!

மதுபானக் கொள்கை வழக்கு குறித்த பல்வேறு சர்ச்சைகளும், திடிக்கிடும் தகவலும் வெளியாகி வரும் நிலையில், கடந்த வாரத்தில் இந்த வழக்கில் சிக்கிய தனியார் மருந்து நிறுவனத்திடம் தேர்தல் பத்திரம் மூலம் பாஜக ரூ.34.5 கோடி பெற்றதாகவும் ஒரு தகவல் வெளியாகி பரப்பரப்பை ஏற்படுத்தியது.  

இதனைத்தொடர்ந்து கைது நடவடிக்கைகள் குறித்தும், சோதனையில் சிக்கிய ஆவணங்கள் குறித்தும் அமலாக்கத்துறை தகவல் வெளியிட்டது. அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில் சமீபத்தில் ஆம் ஆத்மி வேலிடப் பொருப்பாளர் தீபக் சிங்லாவின் வீடு உள்ளிட்ட இடங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுபட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அடுத்து ஒரு தகவலும் வெளியாகி உள்ளது. நடைபெற உள்ள இந்தியா கூட்டணியின் போராட்டத்துக்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளது. அதாவது மதுபானக் கொள்கை வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இந்த கைதை கண்டித்து மார்ச் 31-ல் இந்தியா கூட்டணி சார்பில் போராட்டம் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகள் மீதான ஒன்றிய மோடி அரசை கண்டித்து நடைபெறும் போராட்டத்துக்கு அனுமதி அளித்துள்ளனர். இந்த போராட்டம் டெல்லி ராம்லீலா மைதானத்தில் 31-ம் தேதி போராட்டம் நடைபெற உள்ளது.