நேருக்கு நேர் மோத தயாரா?
நாட்டு நலன் தொடர்பான பிரச்சனைகள் குறித்து பிரதமர் மோடி பேசுவது இல்லை என்ற காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவின் குற்றச்சாட்டை மறுத்துள்ள மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, விவாதத்திற்கு பிரியங்காவும், ராகுலும் தயாரா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறுகையில், பயனற்ற பிரச்சனைகளை பற்றி மட்டுமே பிரதமர் மோடி பேசுகிறார். வேலை வாய்ப்பு, பண வீக்கம், பெண்கள் மீதான அட்டூழியங்கள் ஆகியவற்றை பற்றியும் பேசுமாறு அவருக்கு நான் சவால் விடுகிறேன் எனக் கூறியிருந்தார். இதனை மறுத்து பேசிய, அமேதி தொகுதியில் போட்டியிடும் மத்திய அமைச்சர் ஸ்மிருது இரானி,
எந்த விவகாரங்கள் குறித்தும் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் பாஜகவுடன் ராகுலும், பிரியங்கா விவாதம் நடத்தட்டும் . இதற்கான டிவி சேனலை அவர்களே தேர்வு செய்யட்டும், ராகுலையும் பிரியங்காவையும் வைத்து பாஜக செய்தித் தொடர்பாளர் கேள்விகள் கேட்கட்டும். எங்களது கட்சியை பொறுத்தவரை சுதன்ஷி திரிவேதி மட்டும் போதும். அவர்களுடைய அனைத்து கேள்விகளுக்கும் பதில் கிடைக்கும் என ஸ்மிருது இரானி கூறினார்.