இந்த தொகுதிக்கு மட்டும் மறுதேர்தல்!
குஜராத் மாநிலம் தாஹூத் மக்களவை தொகுதிக்கு உட்பட்ட பர்தாம்பூர் வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த மே 7-ல் இத்தொதியில் தேர்தல் நடைபெற்றது.
அப்போது வாக்குச்சாவடிக்குள் இருந்து பாஜக பிரமுகர் விஜய் பாபார் என்பவர் வாக்குச்சாவடியில் இருந்து நேரலை வீடியோ வெளியிட்டிருந்தார். இதில், வாக்குச்சாவடியை கைப்பற்றி பாஜகவுக்கு வாக்களித்த காட்சிகளும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உள்ளூர் பாஜக தலைவரின் மகனான விஜய் பாபார் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் இத்தொகுதியில் மறு வாக்குப்பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.