சாய் பல்லவியின் அடுத்த படம்?

May 10, 2024 - 00:34
 9
சாய் பல்லவியின் அடுத்த படம்?

தென்னிந்தியாவோட பிரபலமான நடிகையா வலம் வரவங்க தான் சாய் பல்லவி. தமிழ் மற்றும் தெலுங்குல அவருக்குனு தனி ரசிகர் பட்டாலத்தையே வச்சிருக்காங்க. இவங்க நடிச்ச ப்ரேமம் படம் மூலமா ரசிகர்கள் மத்தியில நல்ல வரவேற்பு கிடச்சுது. இவங்களோட டான்ஸ்க்காகவே தெலுங்குல பல படங்கள் நல்ல வரவேற்ப பெற்று வருது.

இந்த நிலையில அடுத்து இவங்க நடிக்க இருக்க தெலுங்கு படம் குறித்த அப்டேட்டும் வெளியாகி இருக்கு.

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் 23வது படமான,  சந்தோ மோண்டெடி  இயக்குற ‘தண்டேல்’ படத்துல சாய் பல்லவி நடிக்கிறாங்க. சாய் பல்லவியோட பிறந்த நாள முன்னிட்டு தண்டேல் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்ன வெளியிட்டிருக்காங்க. இந்த வீடியோவும் சமூக வலைதளங்கள்ல வைரலாகிட்டு வருது. இதனிடையே, சிவகார்த்திகேயனோட 21வது படத்துல நடிச்சிட்டு வரதும் குறிப்பிடத்தக்கது.