விஜய் மாறி Vote போட சைக்கிள்ல போனதுக்கு இதுதான் காரணம் - விஷால் விளக்கம்
அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்தால் நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் ?
விஜய் மாறி Vote போட சைக்கிள்ல போனதுக்கு இதுதான் காரணம் - விஷால் விளக்கம்
நடிகர் விஷால் சமீபத்தில் சேலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தற்போது நடந்த மக்களவைத் தேர்தலில் நடிகர் விஷால் சைக்கிளில் சென்று வாக்களித்தது பற்றி கேட்டுள்ளனர். ஏனென்றால் ,நடிகர் விஜய் எப்பொழுதும் சைக்கிள் சென்று தான் வாக்களிப்பார். அதனால் விஷாலும் விஜய் மாறி இருக்க வேண்டும் என்பதற்காக தான் சைக்கிள் சென்று வாக்களித்துள்ளார் என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு பதில் அளித்த விஷால் , விஜய் மாதிரி இருக்கணும்னு நெனச்சி சைக்கிளில் போகவில்லை, என்கிட்ட வண்டி இல்லை. என்னுடைய காரை வித்துட்டேன். அப்பாவுக்கு மட்டும் ஒரு வண்டி இருக்கு. இன்னைக்கு இருக்கிற ரோடு கண்டிஷனுக்கு வண்டில போறது கஷ்டம் என்று கூறியுள்ளார்.
அரசியலில் கால் வைக்கப் போகும் விஷால்!
2026-ல் திரையரங்களில் நிச்சயம் தான் இருப்பேன் எனவும் வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன் எனவும் தெரிவித்தார். அரசியலுக்கு வரும்போது எந்த கட்சியோடு கூட்டணி, சீட்டு ஒதுக்கீடு பற்றி எல்லாம் யோசிக்காமல் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதை மட்டுமே யோசித்து கட்சியை தொடங்க வேண்டும் என்றார்.
அரசியல்வாதிகள் மக்களுக்கு நல்லது செய்தால் நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வருகிறார்கள் ?
2026-ல் அரசியலுக்கு வருவேன் என சொல்லியுள்ளேன். ஆனால் என்னை அரசியலுக்கு வர விடாதீர்கள். மக்களுக்கு நீங்கள் நல்லது செய்து விட்டால் நான் படத்தில் நடித்துவிட்டு போய்க் கொண்டிருப்பேன்.
2026-ல் இன்னொருத்தருக்கு ஏன் வழி கொடுக்கிறீர்கள், மக்களுக்கு நீங்கள் நல்லது செய்து விட்டால் நாங்கள் எங்கள் தொழிலை விட்டுவிட்டு உங்கள் தொழிலுக்கு வரமாட்டோம் என்றார்.
நடிகர் சங்க கட்டிடம் குறித்து விஷால் கருத்து!
எந்த கட்சியாக இருந்தாலும் மக்களின் அடிப்படை பிரச்சனைகள் மீதுதான் கவனம் செலுத்த வேண்டும் எனவும், தமிழ்நாட்டிற்கு மாற்றம் அவசியம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார். இந்த ஆண்டு இறுதிக்குள் நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்ற விஷால் நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயர் வைப்பது குறித்து நடிகர் சங்கங்களில் உள்ள பெரிய பெரிய ஜாம்பவான்களுடன் பொதுக்கூட்டத்தில் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்று விஷால் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.