இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு?

Jul 26, 2024 - 22:54
 9
இலங்கை அரசு வெளியிட்ட அறிவிப்பு?

இலங்கையில் அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் செப். 21ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணைக் குழு தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கடந்த 2022ல் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக பொதுமக்களிடையே மிகப்பெரிய புரட்சி வெடித்தது. இதனையடுத்து அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சிங்கப்பூரில் தஞ்சமடைந்தார். அங்கிருந்தே தனது பதவியை இவர் ராஜினாமா செய்ததை அடுத்து இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றார்.

இந்நிலையில் தற்போது, இலங்கை அதிபர் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது. தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கோவின் பதவிக்காலம் வரும் நவம்பர் மாதத்துடன் நிறைவடைகிறது.

ஏற்கனவே , அதிபர் ரணில் விக்ரமசிங்கே மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இந்நிலையில், நீதித்துறை அமைச்சர் விஜயதாச ராஜபக்சே, பிரதான எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேபதாச, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா உள்ளிட்டோறும் போட்டியிட போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.