11 வருட திருமண வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி. பிரகாஷ் குமார் தனது காதலியான பாடகி சைந்தவிய 2013ம் ஆண்டு திருமணம் செஞ்சிக்கிட்டாரு. இவங்க இருவரும் 11 ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்த நிலையில தற்போது இவங்க 2 பேரும் பிரியப்போறதா அதிகாரப்பூர்வமா அறிவிச்சிருக்காங்க.
இத பத்தி தனது இன்ஸ்ட்டாங்கிராமில பதிவிட்டுள்ள ஜி.வி.பிரகாஷ், ஆழ்ந்த யோசனைக்கு அப்ரம் தான் இந்த முடிவ எடுத்துக்குறதாவும், 2பேரோட மன அமைதியையும், வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு தான் இந்த முடிவ நாங்க எடுத்தோம் அப்டின்னு சொல்லிருக்காரு.
மேலும், ரசிகர்களும், பத்திரிக்கையாளர்களும் எங்களோட தனிப்பட்ட இந்த முடிவ மதிச்சு புரிஞ்சு ஏத்துக்கனும் அப்டின்னும் சொல்லிருக்காரு. 2பேரும் பிரியிறத தெரிவிக்கிறத விட இந்த முடிவு சிறந்தது அப்டின்னு நாங்க உறுதியா நம்புரோம் அப்டின்னும் இந்த கடினமான நேரத்துல உங்களோட ஆதரவும், புரிதலும் எங்களுக்கு அவசியம்னு பதிவிட்டுருக்காரு.