சவுக்கை தொடர்ந்து ஃபெலிக்ஸ்!
பெண் போலிச்சார் குறித்து அவதூராக பேசியதாக கடந்த வாரம் யூடூபர் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
சவுக்கு சங்கர் சர்ச்சைக்கு உள்ளான முறையில் பேசுவதை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடூப்பின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்டை முதல் குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து, திருச்சி டி.எஸ்.பி யாஸ்மின் அளித்த புகாரின் அடிப்படையில் முசிறி போலீசார் கடந்த 10ம் தேதி பெலிக்ஸ் ஜெரால்டை கைது செய்தனர். அவரை ரெயில் மூலம் போலீசார் தமிழகம் அழைத்து வருவதாக கூறப்பட்டது. இதனிடையே நேற்றிரவு பெலிக்ஸ் மனைவி ஜெயின் ஆன்ஸ்ட்ரீன் திருச்சி எஸ்.பி அலுவலகத்துக்கு மனு கொடுக்க வந்திருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், கைதான கணவரை 2 நாட்கள் ஆகியும் தமிழகம் அழைத்து வரவில்லை. அவரது நிலை குறித்து போலீசார் பதிலளிக்க வேண்டுமென மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் ரெயில் மூலம் பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லியில் இருந்து தமிழகம் அழைத்து வரப்பட்டார். அவரை வேன் மூலம் சென்னையிலிருந்து திருச்சிக்கு அழைத்து சென்ற தனிப்படை போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.