தோனிக்கு கோவில் கட்டுவது உறுதி

May 14, 2024 - 19:26
 18
தோனிக்கு கோவில் கட்டுவது உறுதி

வரும் காலங்களில் தோனிக்கு ரசிகர்களால் கோவில் கட்டப்படும் என சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் மூன்னாள் வீரர் அம்பத்தி ராயுடு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அம்பத்தி ராயுடு 2 உலக கோப்பைகள், 5 ஐ.பி.எல் கோப்பைகளை வென்று ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியவர் தோனி என புகாழாரம் சூட்டியுள்ளார். மேலும், தோனி அணியின் வீரர்கள் மீது தனி நம்பிக்கையும், மரியாதையும் கொண்டவர் எனவும் கூறியுள்ளார். தோனிக்கென தனி ரசிகர் பட்டாலமே இருந்து வரும் நிலையில், தோனி விளையாட்டிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்ததே ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து தற்போது அம்பத்தி ராயுடுவின் இந்த புகழாரமும் சேர்த்து மேலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.