சட்டம் அதிகாரிகளுக்கு இல்லையா?
ஏறக்குறைய 80 ஆண்டுகளாக தலைமுறை தலைமுறையாக குடியிருந்து வரும் மக்களின் உரிமை மற்றும் வாழ்வாதாரம் தொடர்பாக நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போதே பல கோடி மதிப்புள்ள இந்த நிலம் ஏலத்துக்கு வர உள்ளது.
நீதி மன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது இது எப்படி சாத்தியம் என்பது தான் பெரும் கேள்வியாக உள்ளது.
மாவட்ட நடுவர் நீதிமன்ற நீதிபதி அந்தஸ்தில் உள்ளவர் இந்த குத்தகை ஏலத்தை நடத்தும் அதிகாரியாக இருக்கிறார் என்பது தான் கவனிக்க வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி வட்டம் அயனம்பாக்கம் கிராமத்தில் சுமார் 52 சர்வே நம்பர்களில் 51.87 ஏக்கர் நிலம் கந்தசாமி நாயுடு ட்ரஸ்ட் க்கு சொந்தம் எனவும், அதை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அரசு பேராட்சியர். அரசு பொறுப்பு சொத்தாட்சியர் அவர்களிடம் உள்ளது எனவும் மேற்படி இந்த நிலத்திற்கு ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி குத்தகை ஏலம் விடப்படும் என்றும் அதற்கு நான்கு கோடி நிர்ணய தொகை 12 கோடி டேவணித் தொகை என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி அறிவிக்கப்பட்ட நிலத்தின் மீது ஏற்கனவே பூந்தமல்லி நீதிமன்றத்தில் சிவில் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
அதோடு பல்வேறு சட்ட சிக்கல்களும் அந்த இடத்தின் பெயரில் இருப்பதை மறைத்து தான் இந்த குத்தகை ஏலத்தை நடத்துவதாக கூறப்படுகிறது.
அரசு கட்டுப்பாட்டில் உள்ள டிரஸ்ட் நிலம் சட்ட சிக்கல் ஏதும் இல்லாமல் இருந்தால் மட்டுமே குத்தகைக்கு விட முடியும் என பல்வேறு நீதிமன்ற தீர்ப்புகள் உள்ளது.
இந்த நிலையில் ஒரு சில பின்புலத்தின் காரணமாக ஏலம் அவசர நிலையில் ஏற்பாடு செய்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதே நேரம் அந்த ஏல விளம்பரத்தில் உள்ள தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது "அப்படி ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது என்பதே தங்களுக்கு தெரியாது" என தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையில் இன்று திட்டமிட்டபடி ஏலம் நடக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.