சமஸ்கிருத தேர்வை வெற்றிகரமாக முடித்த 134 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

Nov 18, 2025 - 11:37
Nov 18, 2025 - 12:27
 6
சமஸ்கிருத தேர்வை வெற்றிகரமாக முடித்த 134 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

சமஸ்கிருத தேர்வை வெற்றிகரமாக முடித்த 134 மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது

சமஸ்கிருத சுரபி - சமஸ்கிருத பாஷா பிரச்சார கேந்திரம், புது தில்லியில் உள்ள மத்திய சமஸ்கிருத பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, இது திருச்சியில் உள்ள ஜம்புகேஸ்வர க்ஷேத்திரம் திருவானைக்கோயிலில் செயல்படுகிறது.

இந்த மையத்திற்கு அதிகாரப்பூர்வ இணைப்புஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது,தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம்,திருச்சியில் உள்ள கற்றல் ஆதரவு மையத்தின் கீழ்சேர்ந்த மாணவர்களின் நலனுக்காக அதன் கல்வி ஆதரவையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளது. 

கற்றல் ஆதரவு மையத்தின் தொடக்கவிழா பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருப்பதியில் உள்ள தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகத்தின் மாண்பு மிகு துணை வேந்தர் பேராசிரியர் ஜி.எஸ்.ஆர்.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ,மையத்தை திறந்து வைத்து,மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை வழங்கி, சிறப்புரையாற்றினார். 

விழாவின் போது, கடந்த கல்வியாண்டில் நடைபெற்ற சான்றிதழ் மற்றும் டிப்ளமோ தேர்வுகளை வெற்றிகரமாக முடித்த சமஸ்கிருத சுரபியின் 134மாணவர்களுக்கு சான்றிதழ்களையும் அவர் வழங்கினார்.  

இந்த நிகழ்ச்சியில் சம்ஸ்கிருத சுரபி நிறுவனர் திரு இராமச்சந்திரன், , நிறுவன முதல்வர் முனைவர் மங்கள கௌரி, சமஸ்கிருத ஆசிரியர் துணை முதல்வர் திருமதி ஹேமாவதி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். மேலும் கேந்திர பிரசிடெண்ட் திருவாளர் சரவணன் பாலகிருஷ்ணன் அவர்கள் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.