5000 பேருக்கு மேல் கூடினால்… கட்சி தலைவர்களுக்கு கண்டிஷன்!
ரூ. 1 லட்சம் டெப்பாசிட் செலுத்த வேண்டும்
5000 பேருக்கு மேல் கூடினால்… கட்சி தலைவர்களுக்கு கண்டிஷன்!
5000 பேருக்கு மேலான கூட்டங்களுக்கு கட்டுப்பாடு விதிக்க அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் பரிந்துரை.
கூட்டத்தில் பங்கேற்பவர்களின் எண்ணிக்கையை பொறுத்து டெப்பாசிட் தொகை செலுத்த பரிந்துரை.
5,000 முதல் 10,000 பேர் வரை கூடினால் ரூ. 1 லட்சம் டெப்பாசிட் தொகை வசூலிக்க பரிந்துரை.
வரையறுக்கப்பட்ட இடத்தில் மரபு சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு இந்த பரிந்துரைகள் பொருந்தாது.
மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு சார்ந்த நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது.
தேர்தல் நடத்தை விதிகளில் அமலில் இருக்கும் காலங்களில் தேர்தல் ஆணைய விதிகள், நெறிமுறைகள் பின்பற்றப்படும்.
5 ஆயிரம் நபர்களுக்கு மேல் கூடும் மத வழிபாடுகள் அல்லது அரசியல் ரோட் ஷோ, ஆர்ப்பாட்டங்களுக்கு இது பொருந்தும்.
ரோடு ஷோ நடத்துவதற்கு தேசிய நெடுஞ்சாலை அல்லது மாநில நெடுஞ்சாலை அல்லது உள்ளாட்சியிடம் அனுமதி பெற வேண்டும்.
