ஹமாஸ் எடுத்த முடிவு!

Aug 7, 2024 - 22:17
Sep 9, 2024 - 20:41
 14
ஹமாஸ் எடுத்த முடிவு!

பரபரப்பான போர் சூழலில் ஹமாஸ் எடுத்த முடிவு.. உலகமே எதிர்பாராத ட்விஸ்ட் ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். ஈரான் புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள கத்தாரில் இருந்து ஈரான் சென்ற ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியே, ஈரானில் அவர் தங்கியிருந்த வீட்டில் கொல்லப்பட்டார். இதற்கு இஸ்ரேல் தான் காரணம் என ஈரான் குற்றம் சாட்டியது. இந்நிலையில், ஹமாஸ் புதிய தலைவராக யாஹ்யா சின்வார் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் காஸா முனை பிரிவுக்கு தலைவராக இருந்த நிலையில், ஒட்டுமொத்த ஹமாஸ் அமைப்புக்கும் தற்போது தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.