முதல் இடத்தை பிடித்த யோகி ஆதித்யநாத்!

சிறப்பாக செயல்படும் முதல்வர்களில் முதல் இடத்தை 33.2% மக்கள் ஆதரவுடன் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலின் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
30 மாநிலங்களில் 1.36 லட்சம் பேரிடம் எந்த மாநில முதல்வர் சிறப்பாக செயல்படுகிறார் என தனியார் நிறுவனம் கருத்துக்கணிப்பு நடத்தியது. அந்த ஆய்வில் வெளியான தகவலின் அடிப்படையில்,
33.2% மக்களின் ஆதரவுடன் முதல் இடத்தில் உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் பிடித்துள்ளார்.
13.8% மக்கள் ஆதரவுடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் 2ம் இடத்திலும்,
9.1% ஆதரவுடன் மேற்குவங்க முதல்வர் மம்தா பேனர்ஜி 3ம் இடத்தையும் பிடித்துள்ளார்.
4.7% ஆதரவுடன் தமிழக முதல்வர் ஸ்டாலின் 4வது இடத்தை பிடித்துள்ளார்.
அதே போல், 5வது இடத்தில் 4.6 சதவீத மக்கள் ஆதரவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு இடம் பிடித்துள்ளார்.
மகாராஷ்ட்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் செயல்பாடு குறித்து 35சதவீதம் பேர் திருப்தியும், 28 சதவீதம் பேர் அதிர்ப்தியும் தெரிவித்துள்ளனர்.
மேலும், மஹாராஷ்ட்டிரா சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.