திருடர் கையில் சாவி உள்ளது போல் தான் திமுக – ஈபிஎஸ்

Bye Bye Stalin

Sep 6, 2025 - 17:40
 39
திருடர் கையில் சாவி உள்ளது போல் தான் திமுக – ஈபிஎஸ்

திருடர் கையில் சாவி உள்ளது போல் தான் திமுக – ஈபிஎஸ்

திருடர் கையில் சாவி கொடுத்தாற்போல் திமுக கையில் ஆட்சியைக் கொடுத்துவிட்டோமே என தமிழக மக்கள் வருந்தும் அளவிற்கு சட்டம் ஒழுங்கு உள்ளது சட்டம் ஒழுங்கை ஸ்டாலின் அரசு காக்கத் தவறுவதும், குற்றச்செயல்களில் திமுகவினருக்கு தொடர்பு இருப்பதும் தொடர்கதையாக உள்ளது என எடப்பாடி பழனிச்சாமி குற்றம்சாட்டியுள்ளார்.  

கொள்ளையர்களை கொண்டு கட்சி நடத்தும் ஆட்சி இனியும் தேவையா? என்ற கேள்விக்கு நான் செல்லும் தொகுதிகளிலெல்லாம் மக்கள் சொல்லும் பதில் இல்லை என்பது தான்.

நெற்குன்றத்தில் நகை திருட்டு வழக்கில் திமுக பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

நகைத் திருட்டு வழக்கில் அரசியல் குறுக்கீடு இன்றி உரிய விசாரணை நடத்தப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஸ்டாலின் மாடல் அரசை வலியுறுத்துகிறேன்.

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளுக்கான நிரந்தர தீர்வு Bye Bye Stalin எனவும் குறிப்பிட்டுள்ளார்.