கொள்கையே இல்லாத விஜய்க்கு எதுக்கு கட்சி?

Oct 4, 2024 - 21:49
 9
கொள்கையே இல்லாத விஜய்க்கு எதுக்கு கட்சி?

கொள்கையே இல்லாமல் கட்சியை தொடங்கியவர் விஜய் மட்டும் தான் என காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் பேசுகையில், விஜய் தனது கட்சி கொடியை வெளியிட்டு 2 மாதங்கள் ஆகி விட்டது,. ஆனால் இந்த கொடி ஏன் எதற்கு என்பது அவருக்கும் புரியவில்லை, நமக்கும் புரியவில்லை எனவும், கொள்கையே இல்லாமல் கட்சி தொடங்கி சாதனை படைத்தது விஜய் மட்டும் தான் எனவும் கூறியுள்ளார்.

விஜய் அனைவருக்கு விரும்பிய பிள்ளையாக இருக்கிறார். ஆனால் கட்சியை தொடங்கி தன்னையே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

விஜய் விரும்பினால், திமுக, காங்கிரஸ், விசிக என எந்த கட்சியில்; வேண்டுமானாலும் சேரலாம் ஆனால், சீமானுடன் மட்டும் சேர்ந்துவிடக்கூடாது எனவும் விமர்சித்துள்ளார்.