சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கண்டனம்
ஜனநாயகத்துக்கு விரோதனமான செயல்

சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கனிமொழி கண்டனம்!
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கோரிக்கைகளுடனான டி சர்ட் அணிந்து தமிழ்நாட்டு எம்பிக்கள் லோக்சபாவுக்குள் நுழைவதற்கு சபாநாயகர் ஓம் பிர்லா தடை விதித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சபாநாயகர் ஓம் பிர்லாவின் இந்த தடை உத்தரவுக்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் தென் மாநிலங்களுக்கு நியாயமான உறுதி மொழியைத் தரும் வரையில் போராட்டத்தைத் தொடருவோம் என்றும் கனிமொழி அறிவித்துள்ளார்.
இதற்கு முன் எத்தனையோ உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி வாசகம் பொறித்த முகக் கவசங்களை அணிந்து வந்திருக்கிறார்கள். நாங்கள் டி.சர்ட் அணிந்து வரக்கூடாது என சபாநாயகரின் உத்தரவு ஜனநாயகத்துக்கு விரோதனமான செயல் என கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதிக்க தொடர்ந்து அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது