ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்!

Sep 30, 2024 - 17:59
 8
ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்!

உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட அதிகளவு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்,

அரசியலில் பெண்களின் பங்கேற்பை அதிகரிக்க ஓராண்டுக்கு முன்இந்திரா உறுப்பினர் சேர்க்கையை தொடங்கினோம். தற்போது இந்த முயற்சி பெண்கள் தலைமைத்துவத்துக்கான சக்தி வாய்ந்த இயக்கமாக மாறி உள்ளது. உண்மையான சமத்துவம், நீதியை நிலைநாட்ட அதிகளவு பெண்கள் அரசியலுக்கு வர வேண்டும் எனவும்,

பெண்களை மையமாக கொண்ட அரசியலை உருவாக்க நாங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். யதார்த்தத்தில் மாற்றத்தை உருவாக்க விரும்பும் பெண்கள் அனைவரும் அரசியலுக்கு வர சக்தி அபியான் திட்டத்தில் சேர வேண்டுமென நான் கேட்டு கொள்கிறேன்.

இதன் மூலம் வலுவான கட்டமைப்புகளை, அர்த்தமுள்ள மாற்றங்களை ஏற்படுத்த முடியும் எனவும், கிராமங்கள் முதல் நாடு முழுவதும் ஒன்றிணைந்து மாற்றத்தை உருவாக்கலாம்என ராகுல்காந்தி அழைப்பு விடுத்துள்ளார்.