புழல் சிறையில் மாற்றம்?

Oct 4, 2024 - 18:01
 16
புழல் சிறையில் மாற்றம்?

சென்னை புழல் சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையார்கள் சந்திப்பு அறை திறக்கப்பட்டுள்ளது.

இந்த அறையில், ஒரே நேரத்தில் 56 சிறைவாசிகள் தங்கள் உறவினர்களை சந்திக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிலும், சிறைவாசிகள் தங்கள் உறவினர்களை சந்திக்க பிரத்யேக அறையும், வழக்கறிஞர்கள் தங்கள் கட்சிக்காரர்களை சந்திப்பதற்கு பார்வையாளர் அறையையும் மேம்படுத்துமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

அதன் அடிப்படையில், புழல் மத்திய சிறையில் மேம்படுத்தப்பட்ட வழக்கறிஞர்கள், பார்வையாளர்கள் அறை திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்தார்.

மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட வசதிகள் அனைத்தும் மற்ற சிறைகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.