காங்கிரஸ் தலைவரின் தொடர்பு வெட்கக்கேடானது - அமித்ஷா

Oct 4, 2024 - 22:00
Oct 4, 2024 - 22:55
 7
காங்கிரஸ் தலைவரின் தொடர்பு வெட்கக்கேடானது - அமித்ஷா

இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல விருப்புகிறது' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம்சாட்டி உள்ளார்.

வீடு கட்டித் தருவதாக ரூ.400 கோடி மோசடி செய்த காங்கிரஸ் எம்.எல்..,வின் மகனின் ஊழல் வேலைகள் சி.சி.டி.வி., காட்சிகள் மூலம் அம்பலமானது.

24 மணிநேரத்தில் காங்கிரஸ் எம்.எல்.., தரம் சிங் சோக்கர் சரண்டர் ஆகவில்லை எனில் அவரை கைது செய்ய, ஹரியானா போலீசாருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மோடி அரசாங்கம் போதைப்பொருள் மீதான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையில் உறுதியாக உள்ளது. இளைஞர்களை கல்வி, விளையாட்டு மற்றும் புதுமைகளை நோக்கி வழிநடத்தும் பணியில் பா.., ஈடுபட்டுள்ளது.

 

ஆனால், காங்கிரஸ் தனது அரசியல் செல்வாக்கை பயன்படுத்துகிறது.

இளைஞர்களை போதைப்பொருட்களின் இருண்ட உலகத்திற்கு காங்கிரஸ் அழைத்து செல்ல விருப்புகிறது. போதைப்பொருள் இல்லாத இந்தியாவுக்காக மோடி அரசு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கையை கடைபிடிக்கும்.

 

அதே வேளையில், வட இந்தியாவில் இருந்து கைப்பற்றப்பட்ட ரூ.5,600 கோடி போதைப்பொருட்களில் ஒரு முக்கிய காங்கிரஸ் தலைவரின் தொடர்பு மிகவும் ஆபத்தானது மற்றும் வெட்கக்கேடானது என அமித்ஷா கூறியுள்ளார்.