வி.ஐ.பி கலாச்சாரத்தை குறைக்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு அதிரடி
திருப்பதியில் விஐபி கலாச்சாரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டுமென தேவஸ்தான அதிகாரிகளுக்கு ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.
பிரமோர்சவத்தை முன்னிட்டு திருப்பதிக்கு வந்த ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமி தரிசனம் செய்தார்.
பின்னர் திருப்பதி மலையில் உள்ள பத்மாவதி விருந்தினர் மாளிகையில் தேவஸ்தான உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், நிர்வாக ரீதியாக தேவஸ்தானம் முன்னுரிமை கொடுத்து செயல்பட வேண்டும் எனவும், விஐபி கலாச்சாரத்தை குறைத்து கொள்ள வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
அதோடு, பிரசாதங்களின் தரத்தை தொடர்ந்து சோதனை செய்யவும், திருப்பதி மலை வனப்பகுதிகளை 70 முதல் 80 சதவீதம் வரை அடர்ந்த வனப்பகுதியாக மாற்றி அமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.