திருப்பதியில் நடந்த சிறப்பு யாகம்!

Sep 23, 2024 - 22:56
 2
திருப்பதியில் நடந்த சிறப்பு யாகம்!

திருப்பதியில் நடந்த சிறப்பு யாகம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டுக்கொழுப்பு கலக்கப்பட்டதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து திருப்பதி லட்டு தொடர்பான ஆய்வறிக்கையும் வெளியானது. அதில் திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளில் மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு அவற்றின் தடயங்கள் இருப்பதாக உறுதி செய்தனர். இதனை அடுத்து அந்த தோஷத்தை சரி செய்வதற்காக லட்டு  தயாரிக்கும் பணிமனை முழுவதுமாக சுத்தம் செய்யப்பட்டு சிறப்பு தோஷ நிவாரண சாந்தி யாகம் நடத்தப்பட்டது.

லட்டு தோஷத்தை போக்க பரிகார பூஜை!

மேலும் இந்த யாகம் காலை 6 மணி முதல் தலைமை அர்ச்சகர் ராமகிருஷ்ண தீட்சிதர், 8 அர்ச்சகர்கள், 3 ஆகம ஆலோசகர்கள் தலைமையில் யாகம் நடத்தப்பட்டது. இந்த யாகத்தில் வைக்கப்பட்டுள்ள புனித நீரை லட்டு, பிரசாதம் தயாரிக்கும் மடப்பள்ளி உள்ளிட்ட இடங்களில் தெளிப்பதன் மூலம் தோஷங்கள் நிவர்த்தி அடையும் என செயல் அதிகாரி ஷியாமளா ராவ் தெரிவித்துள்ளார்.