மகா விஷ்னுக்கு உற்சாக வரவேற்பு!

Oct 5, 2024 - 23:14
 3
மகா விஷ்னுக்கு உற்சாக வரவேற்பு!

அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மாணவர்களிடையே மதசார்பிண்மைக்கு எதிராக மூட நம்பிக்கைகளை வளர்க்கும் விதமாகவும், மாற்றுத்திறனாளிகளை அவமதிக்கும் வகையிலும் பேசிய ஆண்மீக சொற்பொழிவாளர் மகா விஷ்னு முற்பிறவியில் செய்த பாவங்கள் காரணமாகவே சிலர் மாற்றுத்திறனாளிகளாக பிறப்பதாக பேசியிருந்தார்.

இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, அப்பள்ளியின் ஆசியர்களும் குற்றம்சாட்டியிருந்தனர்.

தொடர்ந்து, அமைச்சர் அன்பில் மகேஷும் இவருடைய பேச்சுக்கு கண்டனம் தெரிவித்திருந்த நிலையில், மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து சிறையில் அடைக்கப்பட்டிருந்த மகா விஷ்னு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் புழல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் மகா விஷ்ணு.

32 நாட்களுக்குப் பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த பறம்பொருள் அறக்கட்டளை நிறுவனர் மகா விஷ்னுவுக்கு அவரது ஆதரவாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் அவருக்கு மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.