பரிசை தட்டிச் சென்ற மாடுகள்… சீரிப்பாய்ந்த காளைகள் மற்றும் குதிரைகள்!
அரிமளம் அருகே உள்ள போசம்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக 48_ம் நாள் மண்டலாபிஷேக விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெரிய மாடு, தேன் சிட்டு, குதிரை வண்டி என மூன்று பிரிவுகளாக எல்கை பந்தயம் நடைபெற்றது.
இதில் புதுக்கோட்டை, மதுரை,தேனி, சிவகங்கை, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 39 ஜோடி மாட்டு வண்டிகளும், 8 குதிரை வண்டிகளும் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டியில் 11 ஜோடி மாடுகளும், தேன் சிட்டு மாடு பிரிவில் 28 ஜோடி மாடுகளும். குதிரை வண்டியில் 8ஜோடிகளும் கலந்து கொண்டன.
பெரிய மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிக்கு போக வர 8 கிலோ மீட்டர் தூரமும், தேன் சிட்டு மாட்டிற்கு போக வர 4 கி.மீ தூரமும் எல்கைகளாக நிர்ணயிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றது.
அறந்தாங்கி காரைக்குடி செல்லும் நெடுஞ்சாலையில் மாட்டு வண்டி ஜோடிகளும், குதிரை வண்டிகளும் நான்கு கால் பாய்ச்சலில் போட்டி போட்டுக் கொண்டு துள்ளிக்குதித்தும் ஒன்றையொன்று முந்தி சென்றது பார்வையாளர்களின் கண்களுக்கு விருந்தாக அமைந்தது
இந்த போட்டியை காண மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஏராளமான பொதுமக்கள் சாலை நெடுகிலும் இரு புறங்களிலும் நின்று சாலையில் துள்ளி குதித்து சீறிப்பாய்ந்து சென்ற மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டிகளையும் அதனை ஓட்டி வந்த சாரதிகளையும் கைத்தட்டி ஆரவாரத்துடன் கண்டு ரசித்தனர்.
மேலும் இந்த பந்தயத்தில் பெரிய மாட்டு வண்டி,தேன் சிட்டு, மற்றும் குதிரை வண்டி பந்தயத்தில் முதல் நான்கு இடங்களை பிடித்த வண்டி உரிமையாளர்களுக்கு ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.