இளம் வயதில் வரலாற்றை எட்டி பிடித்த தமிழக வீரர் குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

தமிழக வீரரான குகேஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன

Dec 13, 2024 - 15:28
Dec 13, 2024 - 17:22
 1
இளம் வயதில் வரலாற்றை எட்டி பிடித்த தமிழக வீரர் குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

இளம் வயதில் வரலாற்றை எட்டி பிடித்த தமிழக வீரர் குகேஷ்…பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

இளம் வயதில் வரலாற்று சாதனை படைத்துள்ள தமிழக வீரரான குகேஷிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இறுதி ஆட்டத்தின் போது கண்ணீரோடு விளையாடிய அந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானதோடு, அனைவருக்கும் மிகப்பெரிய ஆவலையும் ஏற்படுத்தி விட்டது.   

சிங்கப்பூரில் நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024ன் 14வது ஆட்டத்தில் டிங் லிரனை வீழ்த்தி, செஸ் வரலாற்றில் இளைய உலக சாம்பியனாக தமிழக வீரரான குகேஷ் வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

13 ஆட்டங்களுக்குப் பிறகு, 2024 உலக செஸ் சாம்பியன்சிப் 6.5 க்கு 6.5 என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது. FIDE விதிகளின் படி, ஒரு வீரர் சதுரங்க உலக பட்டத்தை வெல்ல 7.5 புள்ளிகளைப் பெற வேண்டும், இல்லையெனில் சாம்பியன்ஷிப் டைபிரேக்கர்களில் முடிவு செய்யப்பட்டிருக்கும்.

குகேஷ் மற்றும் டிங் இருவரும் வெற்றிக்கு ஒரு புள்ளி பின்தங்கி இருந்த நிலையில், இறுதி ஆட்டம் 14 மெய்நிகர் நாக் அவுட் ஆனது.

உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் ஒவ்வொரு வெற்றியும் 1 புள்ளியும், டிரா 0.5 புள்ளிகளையும் பெறுகிறது. 14வது ஆட்டத்தில் வெள்ளைக்காய்களுடன் விளையாடியதால் டிங்குக்கு சாதகமாக இருந்தது. ஆனால் இரு வீரர்களும் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட தவறாமல் சமநிலையாக போட்டி சென்றது.

இதனிடையே, சீன கிரான்மாஸ்டரின் ஒரு தவறு, குகேஷ் வரலாறு படைப்பதற்கு ஏதுவாக இருந்தது.

இந்த போட்டியின் பரிசுத்தொகையை பொறுத்தவரை,

2024 உலக செஸ் சாம்பியன்ஷிப் மொத்தம் 2.5 மில்லியன் டாலர் பரிசுத்தொகையை கொண்டுள்ளது.  FIDE விதிகளின் படி ஒவ்வொறு வெற்றிக்கும் ஒரு வீரருக்கு 2 லட்சம் டாலர் மதிப்பில் தோராயமாக ரூ. 1.68 கோடி வழங்கப்படும்.  மீதமுள்ள பரிசுத்தொகையானது சமமாகப் பிரிக்கப்படும்.

அந்த வகையில், குகேஷ் 3 கேம்களை வென்று தோராயமாக 5.04 கோடியும், டிங் 2 கேம்களை வென்று 3.36கோடியும் சேர்த்துள்ளனர்.

குறிப்பாக, குகேஷ் தோராயமாக 1.35 டாலர் அதாவது 11.34 கோடியும், டிங், 1.15மில்லியன் டாலர் என ரூ..9.66 கோடியும் வென்றுள்ளனர்.

மீதமுள்ள 1.5 மில்லியன் டாலர் இருவருக்கும் சமமாகப் பிரிக்கப்படும்.

கிரிக்கெட்டை ஒப்பிடுகையில் செஸ் தொடரில் வழங்கப்படும் பரிசுத் தொகையானது மிகவும் குறைவு தான்.