33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி | Rajinikanth | ManiRatnam

Oct 8, 2024 - 00:15
 11
33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி | Rajinikanth | ManiRatnam

33 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் வெற்றிக் கூட்டணி | Rajinikanth | ManiRatnam

தா. செ. ஞானவேல் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து அக்டோபர் 10 அன்று வெளியாக இருக்கின்ற வேட்டையன் திரைப்படத்தை தொடர்ந்து ரஜினி தனது 171-வது படம் ஆன கூலி படத்தில் நடித்து வந்தார். சமீபத்தில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இதை தொடர்ந்து, அவர் தற்போது ஓய்வில் இருக்கிறார்.

இதைப் பற்றி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்தியாளர்களிடம் பேசும் போது, "அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெறப்போவது எங்கள் குழுவினருக்கும் மற்றும் பட தயாரிப்பு நிறுவனத்திற்கும் முன்பே தெரியும். அதனால், ரசிகர்கள் மற்றும் ஊடகங்கள் தவறான செய்தியை சமூக வலைத்தளங்களில் பரப்ப வேண்டாம்" என வேண்டுகோள் விடுத்துள்ளார். இதற்கிடையில், ரஜினியின் அடுத்த படம் பற்றிய செய்தி இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த செய்தி என்னவென்றால், ரஜினியின் அடுத்த படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார். இந்த கூட்டணி 1991-ஆம் ஆண்டில் வெளியான 'தளபதி' படத்தில் ஒன்றாக பணியாற்றியது என்பது குறிப்பிடத்தக்கது. மீண்டும் 33 ஆண்டுகள் கழித்து, இந்த வெற்றிக்கூட்டணி ஒன்றாக சேர இருக்கிறது. இப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இந்த ஆண்டு ரஜினியின் பிறந்தநாளன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.