தமிழகம் இருண்டு கிடக்கிறது… விடியல் எங்கே?
47 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறோம்

தமிழகம் இருண்டு கிடக்கிறது… விடியல் எங்கே?
சென்னை தியாகராய நகரில் விடியல் எங்கே? என்ற தலைப்பில் ஆவணத்தை வெளியிட்டுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், இந்த ஆவணத்தில் திமுகவின் தோல்வி குறித்தும், கொடுத்த பொய் வாக்குறுதிகளையும் ஆதாரத்துடன் நிரூபித்திருக்கிறோம்.
ஆவணம் வெறும் பொய் குற்றச்சாட்டு கிடையாது திமுக சொன்ன வாக்குறுதிகளும், வார்த்தைகளும் தான் இடம்பெற்றுள்ளன. தமிழ்நாட்டின் வளர்ச்சி மற்றும் இந்தியாவின் வளர்ச்சிக்காக இதுவரை 47 ஆவணங்களை வெளியிட்டிருக்கிறோம் இது எங்களுக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது என தெரிவித்துள்ளார். தமிழகம் இன்று இருண்டு கிடக்கிறது, எங்கேயும் விடியல் இல்லை என்பதை இந்த ஆவணம் மூலம் நிரூபித்துள்ளோம் என பேசியுள்ளார்.
கடந்த சட்டசபை தேர்தலின் போது திமுக அளித்த வாக்குறுதிகளில் அவர்கள் சொன்ன பொய் வாக்குறுதிகளை தான் வெளியிட்டு இருக்கிறோம் எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.