பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!

ரத்தன் டாடாவுக்கு இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது

Dec 9, 2024 - 12:01
Dec 9, 2024 - 13:24
 6
பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!

பரபரப்பான அரசியல் சூழலில் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடியது!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டம் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களின் முதுபெரும் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா, டாடா நிறுவனத் தலைவர் ரத்தன் டாடாவுக்கு மற்றும் ராணுவ வீரர்கள் உள்ளிட்டோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.  

அதைத்தொடர்ந்து மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது எனவும் மத்திய அரசை வலியுறுத்தி அரசினர் தனி தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன் மொழிய உள்ளார்.

தொடர்ந்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு 2024 – 25 ஆம் ஆண்டு கூடுதல் செலவுக்கான மானிய கோரிக்கைகளை அளிப்பார். தடுப்பணை பாலம் சீரமைப்பு, புதிய சிறை, கால்நடை மருந்தகம், போக்குவரத்து பணிமனை அமைப்பது குறித்து பல்வேறு தொகுதி சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிக்க உள்ளனர்.