ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை!
ஆதவ் அர்ஜூனா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் !
ஆதவ் அர்ஜூனா மீது திருமாவளவன் நடவடிக்கை.... ஆதவ் அர்ஜூனா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் !
விசிகவில் இருந்து துணை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா 6 மாதங்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆதவ் அர்ஜூனா கட்சி தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ச்சியாக எதிர்மறையாக செயல்படுகிறார் எனவும், கட்சி மற்றும் தலைமை மீதான நன்மதிப்பையும் நம்பகத்தன்மையையும் கேள்விக்கு உள்ளாக்கும் வகையில் விமர்சனம் செய்து வருவதாகவும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
மேலும், ஆதவ் அர்ஜூனா மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள விசிக வின் தலைமை நிர்வாகக் குழு தீர்மானம் எடுத்துள்ளது.
ஆதவ் அர்ஜூனாவின் செயல்பாடு கட்சியினருக்கு தவறான முன்மாதிரியாக அமையும் சூழல் எழுந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் மன்னராட்சி நடப்பதாக விஜய் முன்னிலையில் ஆதவ் அர்ஜூனா பேசியிருந்தார் இந்த பேச்சு தவறு என ஏற்கனவே விசிக தலைவர் திருமாவளவன் கூறியிருந்தார்.
இதனையடுத்து, தொடர்ந்து, கட்சி தலைமையின் அறிவுறுத்தல்களை மீறி தொடர்ச்சியாக எதிர்மறையாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொளளப்பட்டுள்ளது.
மேலும், கட்சியின் நலன்களை முன்னிறுத்தி தலைவர், பொதுச்செயலாளர்கல் முடிவின் படி சஸ்பெண்ட் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.