4ம் வகுப்பை தொடர்ந்து 5ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொல்லை…

மணப்பாறை தனியார் பள்ளியில்

Feb 7, 2025 - 16:53
 1
4ம் வகுப்பை தொடர்ந்து 5ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொல்லை…

4ம் வகுப்பை தொடர்ந்து 5ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொல்லை…


மணப்பாறை தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை விவாகர விசாரணையில் அடுத்து அதே பள்ளீயை சேர்ந்த 5 வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொந்தரவு இருந்த தாக புகார் எழுந்துள்ளது.

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில் 4ம் வகுப்பு பயின்ற மாணவிக்கு அந்த பள்ளியின் அரங்காவலர் வசந்த குமார் என்பவர் பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக மணப்பாறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து இதுவரை அந்த பள்ளியினுடைய நிர்வாகிகள் 3 பேர் மற்றும் அந்த பள்ளியின் அறங்காவலர் வசந்த குமார், தலைமை ஆசிரியர் என 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக குழந்தைகள் நல அலுவலர் விசாரணையில் ஈடுபட்டிருக்கிறார்.

இதனிடையே, அதே பள்ளியில் பயிலும் 5ம் வகுப்பு மாணவிக்கும் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.