பொது இடங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை!
பொது இடங்களில் சிலைகள், கட்சிக் கொடிகள் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது

பொது இடங்களில் கட்சிக் கொடிக்கு அனுமதியில்லை!
எந்த கட்சியாக இருந்தாலும் அவர்களது தலைவர்களின் சிலைகள்,கட்சி கொடிகளை சொந்த அலுவலகத்தில் வைக்க வேண்டியது தானே என மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பொது இடங்களில் சிலைகள், கட்சிக் கொடிகள் வைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
பொது இடங்களில் சிலைகள் கட்சிக் கொடிகள் வைப்பதை எந்த கட்சியாக இருந்தாலும், சரி எந்த பெரிய இயக்கமாக இருந்தாலும் அனுமதிக்க முடியாது எனவும்,
தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர்
முத்துக்கிருஷ்ணன் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் கும்பகோணத்தில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர் சிலையை அகற்ற கூடாது என தாக்கல் செய்த மனுவின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த மனுவை அபாரதத்தோடு தள்ளுபடி செய்ய நேரிடும் எனவும் மதுரை அமர்வு நீதிமன்ற நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.