சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!
சோனியா காந்தி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும்
சோனியா காந்திக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள்!
சோனியா காந்தி நீண்ட ஆயுளோடு வாழ வேண்டும் - பிரதமர் நரேந்திர மோடி
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு பிரதமர் நரேந்திர மோடி, எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். சோனியா காந்தி நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாட்கள் வாழ வாழ்த்துகள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும், காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்திக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோனியா காந்தி அமைதி மற்றும் வெற்றிகள் நிறைந்த நல்ல உடல் ஆரோக்கியத்துடன் நீண்டநாள் வாழ வேண்டும் என பதிவிட்டுள்ளார்
மேலும், சோனியா காந்திக்கு அரசியல் தலைவர்கல் பலறும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.