பழனிச்சாமி பொய் பேசுவது பதவிக்கு அழகல்ல – முதல்வர் கண்டனம்
சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து கொண்டிருக்கிறார்
பழனிச்சாமி பொய் பேசுவது பதவிக்கு அழகல்ல – முதல்வர் கண்டனம்
எதிர்க்கட்சித் தலைவராக இருந்துகொண்டு பழனிசாமி பொய் பேசுவது அவர் பதவிக்கு அழகல்ல என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முன்னெச்சரிக்கை செய்யாமல் சாத்தனூர் அணையை திறந்துவிட்டதாக பழனிசாமி பொய் சொல்கிறார். சாத்தனூர் அணையை திறக்கும் முன்பு 5 முறை முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டது.
சாத்தனூர் அணையை வைத்து எடப்பாடி பழனிசாமி அரசியல் செய்து கொண்டிருக்கிறார். அதிமுக ஆட்சியில் செம்பரம்பாக்கம் ஏரியை முன்னறிவிப்பின்றி திறந்ததால் 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
செம்பரம்பாக்கம் வெள்ள பாதிப்பு மனிதனால் ஏற்பட்ட பேரழிவு. ஒன்றிய அரசின் நிதிக்காக காத்திராமல் நாங்களே மீட்பு பணிகளை செய்து முடித்தோம் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.