புதுக்கோட்டையை சேர்ந்த மீனர்வர்கள் கைது!

Aug 5, 2024 - 23:17
Sep 9, 2024 - 21:02
 12
புதுக்கோட்டையை சேர்ந்த மீனர்வர்கள் கைது!

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ஜெகதா பட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த ஒரு விசைப்படகும் நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படை கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மனமேல்குடி தாலுகா ஜெகதாப்பட்டினம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து நேற்று 42 விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்க சென்றன.

இதில், எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்தனர், ஜெகதாபட்டினம் வீரன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் சரண், பாலா,நடராஜன்,பரமசிவம் ஆகிய நால்வரும் மீன்பிடிக்க சென்றனர்.

32 நாட்டிக்கல்மைல் தொலைவில் நெடுந்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேயம் துறைமுகங்கள் கடற்கரை முகாமுக்கு கொண்டு சென்றனர்.