தவெக கொடியின் வரலாறு?

Aug 22, 2024 - 20:13
 5
தவெக கொடியின் வரலாறு?

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார். 2 போர் யானைகளும், நடுவில் வாகை மலரும் இருக்கும் வகையில் மஞ்சல் மற்றும் சிவப்பு நிறத்தில் இந்த கட்சி கொடியானது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த கொடியில் 28 நட்சத்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இதனைத்தொடர்ந்து கட்சி பாடலும் வெளியிடப்பட்டுள்ளது. விவேக் எழுதிய இந்த பாடலை தமன் இசையமைத்துள்ளார். பின்னர் கட்சியின் தொண்டர்கள் நிர்வாகிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடித்து சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் என்ற வாசகங்கள் உறுதிமொழியில் இடம்பெற்றுள்ளன.

தொடர்ந்து இது குறித்து பேசிய விஜய், இது வெறும் கட்சி கொடி மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறைக்கான வெற்றிக் கொடியாக பார்க்கிறேன் என கூறினார்.

மேலும், கட்சிக்கொடிக்கான வரலாற்று பின்னணி உள்ளது. அதை விரைவில் அறிவிப்போம் எனவும் விஜய் தெரிவித்துள்ளார்.