இயக்குநர் பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்த சூர்யா!
நந்தா படத்தை பார்த்துத்தான் காக்க காக்க, கஜினி படங்களின் வாய்ப்பு கிடைத்தது
இயக்குநர் பாலாவுக்கு தங்க சங்கிலியை பரிசாக அளித்த சூர்யா!
சினிமாவில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த இயக்குநர் பாலாவிற்கு பாராட்டு விழா மற்றும் வணங்கான் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. நடிகர்கள் சிவக்குமார், சூர்யா உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சூர்யா, இயக்குநர் பாலாவால் தான் தனது சினிமா வாழ்க்கையே மாறியதாகவும், நந்தா படத்தை பார்த்துத்தான் தனக்கு காக்க காக்க, கஜினி உள்ளிட்ட படங்களின் வாய்ப்பு கிடைத்ததாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் நடிகர் மன்சூர் அலிகான், நடிகை வேதிகா உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் பலறும் கலந்து கொண்டனர்.
மேலும், இயக்குநர் பாலாவுக்கு சூர்யா மற்றும் அவரது தந்தை சிவகுமார் தங்க சங்கிலியை பரிசாக அளித்தனர்.
மேலும், இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட திரைப்பிரபலங்கள் பலறூம் இயக்குநர் பாலா குறித்து பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவித்து உள்ளனர்.