உலகின் 2வது பணக்காரர் இடத்தை பிடித்தார் பேஸ்புக் நிறுவனர்!

Oct 5, 2024 - 01:50
 8
உலகின் 2வது பணக்காரர் இடத்தை பிடித்தார் பேஸ்புக் நிறுவனர்!

உலகின் 2வது பெரும் பணக்காரராக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் இடம் பிடித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டிருப்பதால், உலகப் பணக்காரர்கள் வரிசையில் 2வது இடத்தில் இருந்த அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ்ஸை பின்னுக்குத் தள்ளி மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பர்க் 2வது இடத்தைப் பிடித்துள்ளார்.

புளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டின்படி மார்க் ஜூக்கர்பர்க்கின் பங்குகள் தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கின்றன.

மார்க் ஜூக்கர்பெர்க் கலிபோர்னியாவைச் சேர்ந்த நிறுவனமான மென்லோ பார்க்கில் 13 சதவீத பங்குகளை வாங்கி வைத்துள்ளார். இந்தப் பங்குகள் இந்தாண்டு மட்டும் 78 பில்லியன் டாலர்களை மார்க்கிற்கு சம்பாதித்து கொடுத்துள்ளன.

இந்த வளர்ச்சியானது புளூம்பெர்க் நிறுவனத்தில் ஆராயப்பட்ட 500 உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அதிகளவிலான வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.