பொருளாதாரத்தை படிக்க துவங்கியதன் விளைவு தான் இன்று இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது - மன்மோகன் சிங்
மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு
ஏழ்மையை ஒழிப்பதே தனது நோக்கமாக கருதிய மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு!
தான் ஒரு ஏழையாக இருப்பதை தெரிந்து கொள்ள பொருளாதாரத்தை படிக்க துவங்கியதன் விளைவு தான் இன்று இந்திய பொருளாதாரத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏழ்மையை ஒழிப்பதே தனது நோக்கமாக கருதிய மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு குறித்தும் அவர் வெளியிட்ட முத்தான திட்டங்கள், அங்கீகாரமாக கிடைத்த விருதுகள், விரிவாக விளக்குகிறது இந்த முழு தொகுப்பு.
பிரிக்கப்படாத இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள 'கஹ்' என்ற கிராமத்தில் 1932ம் ஆண்டு செப்டம்பர் 26ம் தேதி அன்று பிறந்தார். மன்மோகன் சிங்
சிறுவயதிலேயே, தாய், தந்தையை இழந்த மன்மோகன் சிங் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்.
அவரது சொந்த கிராமத்தில் ஆரம்பப் பள்ளியோ, சுகாதார மையமோ கிடையாது. பல மைல்கள் கடந்து பள்ளிக்கு செல்ல வேண்டி இருந்தது.
மின்சார வசதிகள் போதுமானதாக இல்லாத அந்த காலத்தில் அவர் மண்ணெண்ணெய் விளக்கு வைத்து இரவு நேரங்களில் படிப்பது வழக்கம்.
மிகவும் அமைதியான சுபாவத்தைக் கொண்ட மன்மோகன் சிங் படிப்பில் சிறந்து விளங்கினார்.
1947ம் ஆண்டு, பிரிவினைக்குப் பிறகு மன்மோகன் சிங் அவருடைய குடும்பத்தோடு இந்தியாவுக்கு வந்தார். அவர்கள் ஆரம்பத்தில் உத்தராகண்டில் அமைக்கப்பட்டிருந்த ஹல்த்வானி அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டனர்.
பிரிவினையால் ஏற்பட்ட பதட்டம் காரணமாக, அவருடைய தேர்வுகளை அவரால் எழுத முடியாமல் போனது. இந்தியாவில் அவர் அந்த தேர்வுகளை எழுதினார். பிறகு பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்க சென்றார்.
இந்தியாவுக்கு வந்த பிறகும் கூட, அவரின் குடும்ப சூழல் நிச்சயமற்றதாக இருந்தது
அவரின் குடும்ப சூழல் மோசமாக இருந்த போதும், பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு தனக்கு கிடைத்த கல்வி உதவித்தொகையை வைத்து அவர் கேம்பிரிட்ஜ் மற்றும் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழங்களில் மேற்படிப்புகளை மேற்கொண்டார்.
ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்த மன்மோகன் சிங், முதலாளித்துவத்தை ஆதரித்தார். நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அது தேவை என்று அவர் கருதினார்.
ஆக்ஸ்ஃபோர்டில் முனைவர் படிப்பை முடித்த பிறகு, அவர் பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார். பிறகு டெல்லி பொருளாதாரப் பள்ளியிலும் அவர் பேராசிரியராக பணியாற்றினார்.
1971ம் ஆண்டு அவர் இந்திய அரசின் வர்த்தகத்துறையில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். அப்போது இருந்து அவர் இந்திய அரசுக்காக பணியாற்றி வந்தார்.
பின்னர், 1971ம் ஆண்டு அவர் இந்திய அரசின் வர்த்தகத்துறையில் பொருளாதார ஆலோசகராக பணியாற்றினார். அப்போது இருந்து அவர் இந்திய அரசுக்காக பணியாற்றி வந்தார்.
1972ம் ஆண்டு அவர் நிதித்துறையின் தலைமை பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டார்.
பிறகு திட்ட அறிக்கையின் துணைத்தலைவர், ரிசர்வ் வங்கியின் ஆளுநர், பிரதமர் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக்குழுவின் தலைவர் உள்ளிட்ட முக்கிய பொறுப்புகளை அவர் வகித்தார்.
குறிப்பாக,
2004ம் ஆண்டு, நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அடல் பிஹாரி வாஜ்பாய் தோற்கடிக்கப்பட்டார்.
அன்றைய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி பிரதமராவார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆனால், பாஜகவினர், குறிப்பாக சுஷ்மா ஸ்வராஜ் கடுமையான எதிர்ப்புகளை பதிவு செய்தார்.
"இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆன பிறகு, வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இந்தியாவின் முக்கியமான பொறுப்பில் பணியாற்றுவார் என்றால் நான் மொட்டை அடித்துக்கொண்டு, செருப்பு அணியாமல், வெள்ளை புடவை உடுத்தி, தரையில் தூங்குவேன்," என்று விமர்சனம் செய்தார்.
அதே, 2004ம் ஆண்டு இந்தியாவின் 13வது பிரதமராக பொறுப்பேற்றார் மன்மோகன் சிங். பின்னர், இந்தியாவின் பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 முதல் 8% ஆக உயர்ந்தது.
இந்த ஆட்சிக்காலத்தின் போது ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டமான நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், ஆர்.டி.ஐ. மூலம் கல்வியை அடிப்படை உரிமைகளில் ஒன்றாக சேர்த்தது, இந்தியா - அமெரிக்கா அணு ஆயுத ஒப்பந்தம், விவசாயக் கடன்கள் ரத்து, மகளிருக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம், வன உரிமைகள் தடுப்பு சட்டம், இலவச கட்டாய கல்வி உரிமை என இவர் கொண்டு வந்த முத்தான திட்டங்கள் ஏராளமானவை.
இவருடைய செம்மையான ஆட்சிக்கு, 2002ல் சிறந்த பார்லிமெண்டேரியன் விருது,
1996ல் கவுரவ டாக்டர் பட்டம், 1993ல் சிறந்த நிதியமைச்சருக்கான யூரோமணி விருது, 1994ல் சிறந்த நிதியமைச்சருக்கான விருது, 1987ல் பத்மபூஷன், 1956ல் கேஎம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு,
1955ல் சிறந்த மாணவருக்கான கேம்ப்ரிட்ஜ் செயிண்ட் ஜான்ஸ் கல்லூரியின் ரைட்ஸ் விருது, மற்றும் 14 கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்றுள்ளார் மன்மோகன் சிங்.
மேலும், மன்மோகன் சிங் எந்த தேர்தலிலும் போட்டியிடவில்லை. ஆனாலும், உலக அரங்கில் ஒரு மகத்தான பொருளாதார நிபுணராக அறியப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.