எடப்பாடி பழனிச்சாமியின் முடிவால் அதிர்ப்தியான செங்கோட்டையன்!
எல்லாம் போக போக தெரியும்

எடப்பாடி பழனிச்சாமியின் முடிவால் அதிர்ப்தியான செங்கோட்டையன்!
என்னை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியிருக்கிறார்கள். பொதுவாக ஜனநாயக முறையில் கட்சியில் இருந்து விளக்கம் கேட்டிருக்க வேண்டும். இன்று, ஜனநாயகத்தை நாங்கள் காக்கிறோம். சுயமரியாதையோடு யார் வேண்டுமானாலும், எந்த கருத்தை வேண்டுமானாலும் சொல்ல எங்கள் இயக்கத்தில் தடை இல்லை என்று பல மேடையில் சொல்லியிருக்கிறார். ஆனால், இப்போது விளக்கம் கேட்காமலயே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் காலம் தான் பதில் சொல்லும்” என செங்கோட்டையன் பதில் அளித்துள்ளார்.
நேற்று நான் சொன்னது போலவே எனது பணி தொடரும்.
சில பேர் என்னிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார்கள். அவ்வளவுதான் சொல்ல முடியும். எல்லாம் போக போக தெரியும்.
ஒவ்வொருவரின் கருத்தையும் ஒவ்வொரு பத்திரிகைகள் மூலம் பிரதிபலிக்கலாம்.
தொண்டர்கள் எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று நினைக்கிறார்கள். அப்படியானால் யாருதான் அந்த கருத்தை வெளிப்படுத்துவது. அதிமுகவுக்கு நல்லது என்பதால் தான் எனது கருத்தை தெரிவித்தேன்.