அண்ணாமலையின் சாட்டையடி குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் வன்னியரசு விமர்சனம்...

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் திமுக தான் வெற்றி பெறும்

Dec 27, 2024 - 15:17
Dec 27, 2024 - 15:58
 7
அண்ணாமலையின் சாட்டையடி குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் வன்னியரசு விமர்சனம்...

அண்ணாமலையின் சாட்டையடி குறித்து அமைச்சர் சேகர்பாபு மற்றும் வன்னியரசு விமர்சனம்

 

லோக்சபா தேர்தல் தோல்விக்காக செய்யும் பரிகாரமே அண்ணாமலையின் சாட்டையடி எனவும்,  

எழுதி வைத்துக்கொள்ளுங்கள் திமுக தான் வெற்றி பெறும் என அமைச்சர் சேகர்பாபு அண்ணாமலைக்கு சவால் விடுத்துள்ளார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக இருப்பதால் தான் நாமெல்லாம் நிம்மதியாக பணியாற்றுகிறோம்.

சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றால் வாய்க்கு வந்ததையெல்லாம் பேசிக் கொண்டு எப்படி சுதந்திரமாக நடமாட முடியும்.

நாட்டிலேயே சட்டத்தின் ஆட்சி நடக்கும் ஒரே மாநிலம் தமிழகம் தான் எனவும் அமைச்சர் சேகர்பாபு விமர்சித்துள்ளார்.

ஓட்டுப்பிச்சை எடுப்பதற்காக இப்படி தன்னைத்தானே சாட்டையில் அடித்துக்கொண்டார் அண்ணாமலை என்று விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு தெரிவித்துள்ளார். மனிதனை மனிதன் கை ரிக்ஷா கொண்டு இழுக்கக்கூடாது என அவற்றுக்கு தடை விதித்தவர் கலைஞர்.

அதே போல சாலைகளில் சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பவர்களை தடுத்து மறுவாழ்வுக்கான வழிகாட்டியவர் கலைஞர். இன்று தமிழ்நாட்டில் இப்படி சாட்டையால் அடித்து பிச்சை எடுப்பதை காண்பது அரிது என அவர் கூறியுள்ளார்.