தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்: அண்ணாமலை

தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்: அண்ணாமலை

Mar 26, 2024 - 11:59
 7
தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்: அண்ணாமலை

தொகுதிக்குத் தேவையானதை தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன் என்று மாநில பாஜகத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற்ற பாஜக கூட்டணி கட்சிகளின் செயல் வீரர்கள் கூட்டத்தில் அண்ணாமலை பங்கேற்றுப் பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது: அரசியலில் நான் விடுமுறை எடுத்ததே இல்லை, என் அம்மாவை பார்த்து 2 மாதங்கள் ஆகிவிட்டது.

தொகுதிக்குத் தேவையானதை தில்லியில் சண்டையிட்டு பெற்றுத் தருவேன்.

இப்போது மாற்றம் இல்லையென்றால், எப்போதும் இல்லை என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன்.

அரசியல் கட்சிகளுடன் சண்டையிடுவதற்காக நான் தேர்தலில் போட்டியிடவில்லை. மக்களவைத் தேர்தலில் 400 எம்பிக்களை பெற்றால் நதிநீர் இணைப்பை செயல்படுத்தலாம் என்று தெரிவித்தார்.

Saravanan Channel 5 Tamil