அண்ணனாகவும், அரணாகவும் பெண்களுக்கு துணை நிற்பேன் - தவெக தலைவர் விஜய்
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது?
அண்ணனாகவும், அரணாகவும் பெண்களுக்கு துணை நிற்பேன் - தவெக தலைவர் விஜய்
அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து தவெக தலைவர் விஜய் தனது கைப்பட கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், “அன்பு தங்கைகளே கல்வி வளாகம் முதற்கொண்டு ஒவ்வொரு நாளும் தமிழகத்தில் தாய்மார்கள், எனதருமை தங்கைகள், குழந்தைகள் என அனைத்து தரப்பு பெண்களுக்கும் எதிராக நடக்கும் சமூக அவலங்கள் சட்டம் ஒழுங்கு சீர்கேடு அவலங்கள், பாலியல் குற்றங்கள் என்று பல்வேறு வன்கொடுமைகளை கண்டு உங்கள் அண்ணனாக மன அழுத்தத்துக்கும், வேதனைக்கும் ஆளாகிறேன்.
யாரிடம் உங்கள் பாதுகாப்பை கேட்பது? நம்மை ஆளும் ஆட்சியாளர்களை எத்தனை முறை கேட்டாலும் எந்த பயனுமில்லை என்பது தெரிந்ததே. அதற்காகவே இந்தக் கடிதம். எல்லா சூழல்களிலும் நிச்சயமாக உங்களுடன் நான் உறுதியாக நிற்பேன். அண்ணனாகவும் அரணாகவும். எனவே எதை பற்றியும் கவலை கொள்ளாமல் கல்வியில் கவனம் செலுத்துங்கள்.
பாதுகப்பான தமிழ்நாட்டை படைத்தே தீருவோம். அதற்கான உத்திரவாதத்தை நாம் இணைந்தே விரைவில் சாத்தியப்படுத்துவோம்” என கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.