இந்தியாவிலேயே கல்வியில் பெண்கள் முதலிடம்!

உயர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன் - ஸ்டாலின்

Dec 30, 2024 - 12:27
Dec 30, 2024 - 12:46
 10
இந்தியாவிலேயே கல்வியில் பெண்கள் முதலிடம்!

இந்தியாவிலேயே கல்வியில் பெண்கள் முதலிடம்!

தமிழ்நாட்டு பெண்கள் இந்தியாவிலேயே முதன்மையான இடத்தில் உள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டு பெண்கள் தான் உயர்கல்வியிலும் முதன்மையான இடத்தில் இருக்கிறார்கள்.

கல்வியை பொறுத்தவரையில் பெண்கள்தான் முன்னிலையில் உள்ளனர். 50 ஆண்டுகளுக்கு முன் பெண்கள் படிப்பதில் தடைக்கற்கள் இருந்தன. பெண்களை படிக்க வைத்தால் பண்பாட்டை இழந்துவிடுவார்கள் என்ற மூடநம்பிக்கையும் இருந்தது. இதனை முறியடிக்கவே கல்விக்கான ஏராளமான முன்னெடுப்புகள் நீதிக்கட்சி ஆட்சியில் எடுக்கப்பட்டது.

குறிப்பாக பெண்களுக்கு எதிராக படிப்புக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன் எனவும், யர்கல்வி பயிலாத பெண்களை இல்லை என்ற நிலையை உருவாக்காமல் ஓயமாட்டேன்' என முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்.