முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நிலையிலும் எப்படி பெருமை பேச முடிகிறது – அண்ணாமலை

குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model

Dec 30, 2024 - 13:14
Dec 30, 2024 - 17:27
 10
முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நிலையிலும் எப்படி பெருமை பேச முடிகிறது – அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நிலையிலும் எப்படி பெருமை பேச முடிகிறது – அண்ணாமலை

முதல்வர் ஸ்டாலின் அவர்களே இந்த நிலையிலும் எப்படி பெருமை பேச முடிகிறது என தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.

இன்று தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், பெண்களின் உயர்கல்வி குறித்து புரட்சிகரமாக பேசியிருந்தார்,  

ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி எனவும், பெண்களுக்கு எதிராக படிப்புக்கு மட்டுமல்ல, வேறு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பேன் எனவும்தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியிருக்கிறார்.

ஒரு கல்லூரிக்குள் நுழைந்து அங்கு பயிலும் ஒரு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தவனை உங்கள் கட்சியில் இருந்து இன்று வரை நீக்காமல் ஒரு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கும் போது, மேடையில் எப்படி இப்படி பேசுகிறீர்கள் என அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், ஒரு பெண் கல்லூரிக்குள் நுழைந்தால் அது சமூக புரட்சி என்கிறீர்களானால், அந்த பெண்ணுக்குக் கொடுக்கப்பட வேண்டிய குறைந்தபட்ச பாதுகாப்பை கூட உறுதி செய்ய முடியாத ஒரு அவல ஆட்சி தான் இந்த திராவிட Disaster Model. என கூறி திமுக அரசை அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.