செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்… நிபந்தனை என்ன?

Sep 26, 2024 - 19:44
 17
செந்தில்பாலாஜிக்கு ஜாமீன்… நிபந்தனை என்ன?

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி இதோடு 15 மாதங்கள் சிறையில் இருந்து வந்த நிலையில் தற்போது உச்சநீதிமன்றம் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்கியுள்ளது.

இதில், இவருக்கு சில நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளது. செந்தில் பாலாஜி திங்கள் மற்றும் வெள்ளிக்கிழமை அமலாக்கத்துறை அலுவலகத்தில் கையெழுத்திட வேண்டும்,

எப்போது விசாரணைக்கு அழைத்தாலும் ஆஜராக வேண்டும்,

விசாரணை கைதியாகவே இருப்பதனால், அடிப்படை உரிமை கருதி இந்த நிபந்தனை ஜாமீன் விதிக்கப்பட்டுள்ளதாகவும், ரூபாய், 25 லட்சத்துக்கு இரு நபர் உத்திரவாதம் வழங்க வேண்டும் எனவும்,

சாட்சிகளை கலைக்க எந்தவித முயற்சியும் மேற்கொள்ள கூடாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறிப்பாக, செந்தில் பாலாஜி அமைச்சராக பதவியேற்க எந்த தடையும் இல்லை என செந்தில் பாலாஜியின் வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ கூறியுள்ளார்.