தற்செயலாக நடந்த தீ விபத்து…. நீதிபதி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி!
நடவடிக்கை எடுக்குமா மத்திய அரசு?

தற்செயலாக நடந்த தீ விபத்து…. நீதிபதி வீட்டில் சிக்கிய ரூ.100 கோடி!
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டிலிருந்து கணக்கில் ரூ.100 கோடி வரை கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த யஷ்வந்த் வர்மாவின் வீட்டில் அண்மையில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, நீதிபதி வீட்டில் கட்டு கட்டாக பணம் இருந்தது குறித்து தீயணைப்பு துறையினர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
தகவல் வெளியான உடனேயே இவர் அலகாபாத் நீதிமன்றத்துக்கு பணியிடமாற்றம் செய்த உச்சநீதிமன்றம். தேவையற்றவர்களை வீசி எறிவதற்கு இது குப்பை தொட்டியல்ல என அலகாபாத் வழக்கறிஞர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இவருக்கு வெறும் பணியிடமாற்றம் மட்டும் போதாது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய மாநிலங்களவையில் கோரிக்கை எழுந்துள்ளது.
நீதிபதி வீட்டில் இருந்து பல கோடி ரூபாய் பறிமுதல் செய்த போலீசார் முழு விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீதிபதி யஷ்வந்த் வர்மா மீது வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அறிக்கை கேட்டுள்ளார்.
இதனைத்தொடர்ந்து, அவர் மீது குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில் கண்டிப்பாக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசு தரப்பில் உறுதியாக கூறப்பட்டுள்ளது.