12 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மான் திரைப்படம்

ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ்

Dec 31, 2024 - 16:57
Dec 31, 2024 - 17:12
 5
12 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மான் திரைப்படம்

12 வருடம் கழித்து ரீ-ரிலீஸ் ஆகும் துல்கர் சல்மான் திரைப்படம்

நடிகர் துல்கர் சல்மான் நடித்த இரண்டாவது திரைப்படம் தான் உஸ்தாத் ஹோட்டல். அன்வர் ரஷீத் இயக்கிய இந்த படத்திற்கு ‘பெங்களூர் டேஸ்’ புகழ் இயக்குநர் அஞ்சலி மேனன் கதை எழுதியிருக்கிறார்.

தாத்தாவுக்கும் பேரனுக்குமான பாசத்தையும் ஒரு இளைஞனுக்கு அவன் எதிர்காலத்தை தீர்மானித்து கொள்ளும் உரிமை இருக்கிறது என்பதையும்  மையப்படுத்தி இந்தப்படம் உருவாகி இருந்தது.

 2012ல் வெளியான இந்த திரைப்படம் அவரை பெண்களிடமும் குழந்தைகளிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக குடும்பப் பாங்கான கதை அம்சமாக அமைந்ததுடன் மிகப்பெரிய வெற்றியும் பெற்றது.

தற்போது 12 வருடங்கள் கடந்த நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 3ம் தேதி கேரளாவில் பல திரையரங்குகளில் ரீ ரிலீஸ் செய்யப்படும் என படத்தின் தயாரிப்பாளரும், இயக்குனருமான அன்வர் ரஷீத் அறிவித்துள்ளார்.